அமெரிக்காவில் பனிப் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!
அமெரிக்காவில் ஏற்பட்ட பனிப் புயலால் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு அமெரிக்க நகரங்களில் கடுமையான பனி மழை பெய்து வருகின்றது. மிசோரி முதல் வர்ஜீனியா வரையிலான நகரங்களில் திங்கட்கிழமை பிற்பகல் முதல் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்ச கணக்கான மக்கள் மின் சேவை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வானிலை மிகவும் மோசமாக காணப்படுவதால் 2,400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மேலும், சாலை வழிப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்களின் பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையான வானிலையை ஜனாதிபதி ஜோ பைடன் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட மாகாணங்களுக்கு தேவையான உதவிகள் அனைத்து வழங்க உத்தரவிட்டுள்ளார் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள் பாதிப்பு!