உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்படும் மில்லியன் கணக்கான பிரித்தானியர்கள்!
பிரித்தானியாவில் சுமார் 2.4 மில்லியன் பெரியவர்களுக்கு உணவு ஒவ்வாமை பிரச்சினை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
உணவு தரநிலை ஏஜென்சியின் (FSA) சமீபத்திய கணக்கெடுப்பின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 2.4 மில்லியன் பெரியவர்களுக்கு உணவு ஒவ்வாமை பிரச்சினை உள்ளதாகவும், அவர்களுள் 2 முதல் 4 சதவீதமான குழந்தைகளும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில் 15 வயதான நடாஷா எட்னன் என்பவர் உணவு ஒவ்வாமை காரணமாக உயிரிழந்தார்.
இது உணவகங்கள் மீதான கடுமையான சட்டங்களை கொண்டுவர வழியமைத்தது. குறிப்பாக தங்கள் தயாரிப்புகளை தளத்தில் பேக்கேஜ் செய்யும் விற்பனை நிலையங்கள் இப்போது லேபிளில் முழு மூலப்பொருள் பட்டியலை வழங்க வேண்டும், முதல் 14 ஒவ்வாமைகளை முன்னிலைப்படுத்த வேண்டும்.
சட்டப்படி, உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் பப்கள் ஆகியவை 14 பொதுவான ஒவ்வாமைகளில் ஏதேனும் ஏதேனும் உள்ளதா என்பதை வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.