பிரான்ஸில் அதிஷ்ட்டலாபச் சீட்டில் மில்லியன் யூரோக்கள் வெற்றியாளர் மாயம் – தேடும் அதிகாரிகள்
பிரான்ஸில் அதிஷ்ட்டலாபச் சீட்டில் ஒரு மில்லியன் யூரோக்கள் வென்ற ஒருவர் தேடப்பட்டு வருகின்றார்.
Euro Millions அதிஷ்ட்டலாபச் சீட்டில் அவரது வெற்றித்தொகையை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அவரது வெற்றித்தொகையை பெற்றுக்கொள்ள இன்னும் ஒரு நாள் மாத்திரமே மீதமுள்ள நிலையில் அவர் தேடப்பட்டு வருகின்றார்.
Alpes-Maritimes மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரே இந்த தொகையை வெற்றிபெற்றுள்ளார்.
கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி அன்று அவர் வெற்றிபெற்றதாகவும் அவருக்கான தொகையை பெற்றுக்கொள்ள இன்று இரவு 11.59 மணிக்குள் முன்வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நேரத்தைக் கடந்ததன் பின்னர் வெற்றியாளர் அவரது வெற்றிப்பணத்தை கோரமுடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 31 times, 1 visits today)





