பால் தேநீரின் விலை குறைப்பு!
பால் தேநீரின் விலையை குறைக்க அகில இலங்கை உணவகம் மற்றும் பார் உரிமையாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேற்படி விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வருகிறது.
இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்மைய இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால்மா பொதிகளின் விலை 125 ரூபாவாலும், 400 கிராம் பால்மா பொதிகளின் விலை 50 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





