பிரித்தானியாவில் தமிழ் இளைஞர்களுக்கும் கட்டாயமாகும் இராணுவ சேவை!
பிரித்தானியாவில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் ரிஷி சுனக் புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது கன்சர்வேட்டிவ் கட்சி தேர்தலில் வெற்றிபெற்றால் 18 வயது இளைஞர்கள் இராணுவ சேவை, அல்லது NHS இல் பணியாற்றும் வகையில் ஒரு புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டார்.
இது இளைஞர்கள் நாட்டுக்காக பணியாற்றுவதை குறிக்கிறது. ஆனால் இந்த சேவைகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டுமா என்பது தொடர்பில் தெளிவாக எடுத்துரைக்கப்படவில்லை.
உக்ரைன், ரஷ்யா ஆகிய நாடுகளில் போர் அதிகரித்து வருகின்ற நிலையில், சில நாடுகள் இளைஞர்களை கட்டாய இராணுவ சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளன.
இதனை ரிஷி சுனக்கும் நடைமுறைப்படுத்த திட்டமிடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. எவ்வாறாயினும் இளைஞர்கள் இந்த சேவைகளில் இணையவில்லை என்றால் அவர்கள் சிறைக்கு அனுப்பபட மாட்டார்கள் என உள்துறை செயலர் ஜேம்ஸ் கிளவர்லி தெரிவித்துள்ளார்.
ஒருவேளை கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியமைக்கும் பட்சத்தில் இந்த விடயம் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது. அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்படும் பட்சத்தில் பிரித்தானியா வாழ் புலம் பெயர் தமிழர்களின் பிள்ளைகளும், நாட்டுக்காக சேவை செய்ய நிர்பந்திக்கப்படலாம்.