உலகம்

ராணுவ உறவு ;அமெரிக்க,சீன ராணுவ உயரதிகாரிகள் காணொளி அழைப்பு மூலம் பேச்சுவார்த்தை

அமெரிக்கா மற்றும் சீனாவின் ராணுவ உயரதிகாரிகள் முதல் முறையாகக் காணொளி அழைப்பு மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.இந்தப் பேச்சுவார்த்தை செப்டம்பர் 10ஆம் திகதியன்று நடைபெற்றதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராணுவ உறவுகளைச் சீராக்கவும் தவறான புரிதலைத் தவிர்க்கவும் இருநாடுகளும் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

சீனாவின் ராணுவத்துடன் அடிக்கடி தொடர்புகொள்ள ஏதுவாகப் புதிய வழிமுறைகளை அமைக்க அமெரிக்கா முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில் வானில் பறந்துகொண்டிருந்த பலூன் ஒன்றை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.அது வேவு பார்ப்பதற்காக சீனா அனுப்பிய பலூன் என்று சந்தேகிக்கப்பட்டது.அதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையிலான உறவு முன் இல்லாத அளவுக்கு மோசமடைந்தது.

இந்நிலையில், செப்டம்பர் 10ஆம் திகதியன்று அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் தளபத்தியத்தின் தலைவர் அட்மிரல் சேம் பபாரோ, காணொளி அழைப்பு மூலம் சீன ராணுவத்தின் அட்மிரல் வூ யானானுடன் தொடர்புகொண்டார்.இருநாடுகளுக்கும் இடையிலான பொதுவான அக்கறைகள் குறித்து இருவரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதாக சீனத் பாதுகாப்பு அமைச்சு கூறியது.

தென்சீனக் கடலில் சீனா அபாயகரமான, தூண்டிவிடும் உத்திகளைக் கடைப்பிடிப்பதாகவும் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சீன ராணுவத்திடம் அட்மிரல் பபாரோ கேட்டுக்கொண்டார்.தவறான புரிதலைத் தவிக்க இருநாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை தொடர்வது மிகவும் முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.

தவறான புரிதல் காரணமாக அல்லது தவறுதலாக இருநாடுகளின் ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்படும் அபாயம் குறித்து தாம் கவலைப்படுவதாக சீனாவுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கலஸ் பர்ன்ஸ் தெரிவித்தார்.இவ்வாரம் சீனாவில் நடைபெற இருக்கும் முக்கியப் பாதுகாப்புக் கருத்தரங்கிற்கு மூத்த பாதுகாப்பு அமைச்சு அதிகாரி ஒருவரை அனுப்பிவைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!