சூடானில் விபத்திற்குள்ளான இராணுவ விமானம் : 19 பேர் பலி!

சூடான் இராணுவ விமானம் ஒன்று ஓம்டுர்மன் நகரில் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அன்டோனோவ் விமானம் ஓம்டுர்மனுக்கு வடக்கே உள்ள வாடி சயீத்னா விமான தளத்திலிருந்து புறப்பட்டபோது விபத்துக்குள்ளானதாக இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் ஆயுதப்படை வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இராணுவம் கூறியது, ஆனால் எத்தனை பேர் என்பதை வெளியிடவில்லை. விபத்துக்கான காரணம் என்ன என்பதும் அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும், குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் உடல்கள் ஓம்டுர்மனில் உள்ள நவ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)