ஆப்பிரிக்கா செய்தி

மத்திய ஆப்பிரிக்க நாடான காபோனில் இராணுவப் புரட்சி – வீட்டுக் காவலில் ஜனாதிபதி

எண்ணெய் வளம் மிக்க மத்திய ஆப்பிரிக்க நாடான காபோனில் புதன்கிழமை இராணுவ புரட்சி நடந்தது. ஜனாதிபதி அலி போங்கோ ஒண்டிபா இராணுவத்தால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

சமீபத்திய தேர்தல்களில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பிறகு, இந்த நாட்டில் அவரது குடும்பத்தின் ஆட்சி தொடர்வதற்கான மேடை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் அவரது தேர்தல் செல்லாது எனக் கூறி வீட்டை கைது செய்த இராணுவம், பின்னர் மகன் தேசத்துரோக வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஜனாதிபதியின் குடும்பத்திற்கு எதிராக நீண்ட காலமாக பல ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த குடும்பம் நாட்டின் எண்ணெய் வளத்தை சூறையாடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒருபுறம் நாட்டு மக்கள் பட்டினியால் வாடுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

வீட்டுக்காவலுக்குப் பிறகு போங்கோ தொலைக்காட்சி சேனல்கள் மூலம் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க அழைப்பு விடுத்தார். விரைவில் அவரது ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல் செல்லாது என இராணுவம் அறிவித்து அவரை கைது செய்துள்ளது. இதனால் மக்கள், குறிப்பாக இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக தெருக்களில் குவிந்தனர்.

இத்தனை வருடங்களின் வலி நீங்கிவிட்டது. சுதந்திரம் கிடைத்துவிட்டதாக கூறி இராணுவ வீரர்களுடன் தேசிய கீதம் பாடினர். பல இடங்களில் இராணுவம் வாழ்க என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

(Visited 12 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி