ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைய துருக்கி வழியே ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் புலம்பெயர்ந்தோர் : ஒருவர் பலி!
துருக்கியில் டிங்கி படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புலம்பெயர் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
படகில் இருந்து எஞ்சி 25 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய எல்லைப் பாதுகாப்பு ஏஜென்சியான ஃபிரான்டெக்ஸின் உதவியுடன் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
அதேவேளை இன்று (29.04) அதிகாலை 10 பேர் கரையோர பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும், அவர்களும் குறித்த டிங்கி படகில் இருந்தவர்களா என்பதை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கியை தளமாகக் கொண்ட கடத்தல்காரர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழையும் இடமாக அருகிலுள்ள கிரேக்க தீவுகள் வழியே ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. ்
(Visited 5 times, 1 visits today)