தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோதமாக பணிப்புரிந்து வந்த புலம்பெயர்ந்தோர் கைது!
தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோதமாக பணிப்புரிந்து வந்த 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியேற்ற மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளால் நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் (Johannesburg) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய குடியேற்ற சீர்த்திருத்தங்களின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
சுற்றுலா விசாக்களில் வருகை தந்த குறித்த ஏழு பேரும் நிறுவனம் ஒன்றில் சட்டவிரோதமாக பணிப்புரிந்து வந்ததாக உள்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சோதனை அமெரிக்காவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையே பதட்டங்களை அதிகரிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஆட்சியமைத்ததில் இருந்து தென்னாப்பிரிக்க அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
குறிப்பாக தென்னாப்பிரிக்கா அமெரிக்க எதிர்ப்பு வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கிடையே தென்னாப்பிரிக்க உள்துறை அமைச்சகம் கென்யர்கள் யாருக்காக வேலை செய்தார்கள் என்பதை குறிப்பிடவில்லை.
அதேநேரம் கைது செய்யப்பட்ட ஏழு கென்ய பிரஜைகளும் நாடு கடத்தப்படவுள்ளதாகவும், ஐந்து ஆண்டுகளுக்கு தென்னாப்பிரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சகம் “இந்த விஷயத்தைத் தீர்க்க அமெரிக்கா மற்றும் கென்யா ஆகிய இரு நாடுகளுடனும் முறையான இராஜதந்திர நடவடிக்கைகளை” தொடங்கியுள்ளதாக கூறியுள்ளது.





