வெனிசுலாவில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையை விமர்சித்த மிச்சிகன் ஆசிரியை கைது
வெனிசுலாவில்(Venezuela) அமெரிக்காவின்(America) இராணுவ நடவடிக்கை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை(Donald Trump) விமர்சித்த மிச்சிகனில்(Michigan) உள்ள ஒரு பாலர் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
22 வயதான ஜெசிகா பிளிச்டா(Jessica Blichda) என்ற ஆசிரையையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவும்(Nicolas Maduro) அவரது மனைவியும் கராகஸில்(Caracas) அமெரிக்கப் படைகளால் தடுத்து வைக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
ஏபிசி நியூஸ் ஊடகத்தின் தனது நேர்காணலை முடிக்கும்போது ஆசிரியை கைது செய்யப்பட்டார். அவர்கள் அவளை அழைத்துச் செல்லும்போது, ”நான் கைது செய்வதை எதிர்க்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.





