பிரான்ஸ் தலைநகரில் ஏலத்தில் விடப்பட்ட மைக்கல் ஜெக்சனின் தொப்பி
![](https://iftamil.com/wp-content/uploads/2023/09/inbound6781182476652580495-jpg.webp)
பிரபல பாடகர் நடன கலைஞருமான மைக்கல் ஜெக்சனின் தொப்பி நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஏலத்துக்கு வருகிறது.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னர் மைக்கல் ஜெக்சன் மேடை நிகழ்ச்சியின் போது அணிந்த, Fedora வகைத் தொப்பி ஒன்று முதன்முறையாக பரிசில் ஏலம்விடப்பட உள்ளது.
மேடை நிகழ்ச்சிகளில் அவரது இந்த தொப்பி மிகவும் புகழ்பெற்றதாகும்.
Moonwalk நடனத்தின் போது அவர் இந்த கறுப்பு நிறத்தொப்பியினை தவறாது அணிந்திருப்பார்.
இந்த தொப்பி உட்பட மொத்தமாக 50 அரிய பொருட்கள் இன்று செவ்வாய்க்கிழமை ஏலத்துக்கு வருகிறது.
பாரிஸ் 9 ஆம் வட்டாரத்தில் உள்ள Drouot அரங்கில் இந்த ஏலம் நடைபெற உள்ளது.
(Visited 10 times, 1 visits today)