ஒப்பந்தத்தை மீறிய மெக்சிக்கோ – கடும் கோபத்தில் எச்சரித்த டிரம்ப்

மெக்சிக்கோவுடனான தண்ணீர் ஒப்பந்தம் குறித்து அதன்மீது தடைகளையும் வரிகளையும் விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே 81 ஆண்டுகளாக தண்ணீர் ஒப்பந்தம் உள்ளது. 1944 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் மெக்சிக்கோ அமெரிக்காவுக்கு 1.75 மில்லியன் ஹெக்டர்-அடி அளவிலான தண்ணீரை அனுப்ப வேண்டும்.
ஆனால் கொடுக்கவேண்டிய அளவைவிட மெக்சிக்கோ 30 விழுக்காடு குறைவாகத் தண்ணீர் கொடுத்து வருகிறது என்று அனைத்துலக எல்லைகள், தண்ணீர் ஆணையம் தெரிவித்தது.
ஒப்பந்த நிபந்தனைகளை மெக்சிக்கோ மீறி இருப்பதாக அதிபர் டிரம்ப் தமது சமூக ஊடகத் தலமான Truth Socialஇல் தெரிவித்தார்.
இதுகுறித்து மெக்ஸிகோவின் ஜனாதிபதி அலுவலகம் இன்னும் கருத்துரைக்கவில்லை.
(Visited 2 times, 1 visits today)