டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீதான கட்டுப்பாடுகளை நீக்கிய மெட்டா
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவதாக மெட்டா தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டில் அவரது ஆதரவாளர்கள் அமெரிக்க கேபிட்டலை வன்முறையில் தாக்கியதை அடுத்து நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன.
ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க கேபிட்டலை அவரது ஆதரவாளர்கள் தாக்கிய ஒரு நாளுக்குப் பிறகு டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் காலவரையின்றி இடைநிறுத்தப்பட்டன.
எதிர்கால மீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற அச்சுறுத்தலுடன் பிப்ரவரி 2023 இல் அவரது கணக்குகள் மீட்டெடுக்கப்பட்டன, தற்போது மெட்டா கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கியுள்ளது.
(Visited 4 times, 1 visits today)