இலங்கை

மெனிங்கோகோகல் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கொழும்பு மாவட்டத்தில் மெனிங்கோகோகல் நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து, அந்நோய் அறிகுறிகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காய்ச்சல், குளிர், சோர்வு, வாந்தி, கை மற்றும் பாதங்களில் குளிருணர்வு போன்ற அறிகுறிகள் மெனிங்கோகோகல் நோயின் பொதுவான அறிகுறிகளாகும் என அவர்கள் கூறியுள்ளனர்.

ரத்மலானையில் உள்ள அலுவலகம் ஒன்றில் பணிபுரிபவரும் ஜா-எல, நிவாங்கமவையில் வசிப்பவருமான 49 வயதுடைய ஒருவரே மெனிங்கோகோகல் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளார்.  இந்த நோய் முதலாவதாக காலி சிறைச்சாலையில் கண்டறியப்பட்டது.

இந்நோயாளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மெனிங்கோகோகல் நோய் போன்ற அறிகுறிகள் இனம்காணப்பட்டதால் தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜெயன் மெண்டிஸ் இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையில், மெனிங்கோகோகல் நோயின் அறிகுறிகளுடன் எந்தவொரு நோயாளியும் தனது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

மெனிங்கோகோகல் நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்