ஆசியா செய்தி

ஜப்பானில் முதுமையை முறியடித்து இளமையாக வாழ விரும்பும் ஆண்கள்

ஜப்பானில் முதுமையை முறியடித்து இளமையான தோற்றத்துடனேயே வாழ வேண்டும் என்ற எண்ணம் ஆண்களிடையே அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

அவர்கள் விடாமுயற்சியுடன் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்காக, வெயிலிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும் களிம்பைப் பூசிக் கொள்வது, புகைப்பிடிக்காமல் இருப்பது, இரவில் சீக்கிரமாக உறங்குவது, உடற்பயிற்சி செய்வது, அழகு நிலையத்திற்குச் செல்வது, தினமும் ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவது, அதுவும் உறைந்த காய்கறிகளை மட்டுமே சாப்பிடுவது என்று பல வழிகளை அவர்கள் பின்பற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முயற்சிகளின் பலனாக 10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததுபோல தோற்றம் அளிப்பதாகச் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

இளமையான தோற்றம் வேலையிலும் வாழ்க்கையிலும் கூடுதல் தன்னம்பிக்கையைத் தருவதாகக் கூறுகின்றனர். இளமை மீதான இந்த மோகம் குறித்து இணையத்தில் பலர் விவாதித்து வருகின்றனர்.

சிலர் தற்போதைய சமூகத்தில் இளைமையாக இருப்பது சாதகமான சூழல்களை உருவாக்கும் என்று ஆதரவு தெரிவிக்கின்றனர்.

ஆனால் வேறு சிலர் முதுமைக்கும் அனுபவத்திற்கும் இன்றைய உலகில் இடமில்லாமல் போய்விடும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

(Visited 20 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!