அறிந்திருக்க வேண்டியவை

பெண்களை விட ஆண்களிற்குதான் வேகமாக வயதாகுமாம்!

அறிவியலின் வளர்ச்சி ஒவ்வோர் ஆண்டும் அபரிமிதமாக வளர்ந்துவருகிறது. இதற்கிடையில் சில ஆய்வுகள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தக்கூடியது. அப்படியான சில அறிவியில் உண்மைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பெண்களைவிட வேகமாக முதுமையடையும் ஆண்கள்

பெண்களிடன் ஆண்கள் விரும்பும் சீக்ரெட் விஷயங்கள் இதுதான்..! அவர்களே பகிர்ந்துகொண்டது..!

சமீபத்திய ஆய்வின்படி,  ஆண்களுக்குப் பெண்களைவிட வேகமாக வயதாகிறது. உயிரியல் ரீதியாகப் பெண்களைவிட 4 வயது மூத்தவர்களாக ஆண்கள் இருக்கிறார்கள் என்றும்,  அதை இளம் வயது ஆண்களிடம் தெளிவாகக் காண முடியும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

புற்றுநோய்க்கு முடிவுரை

உலக ரத்த புற்றுநோய் நாள்: முறையான சிகிச்சை ரத்த புற்றுநோயிலிருந்து நம்மைக் காக்கும் | World Blood Cancer Day: Proper treatment can protect us from Blood Cancer - hindutamil.in

டோஸ்டார்லிமாப் என்பது ஒரு புற்றுநோய் மருந்து. அந்த மருந்தின் செயல்திறன் சோதனையின் ஒரு பகுதியாக,  12 புற்றுநோய் நோயாளிகளுக்கு அந்த மருந்து ஆறு மாதங்கள் வழங்கப்பட்டது. அந்தச் சோதனையின் முடிவுகள் 100 சதவீதம்,  முழுமையான வெற்றியைக் காட்டின. மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி  உடல் பரிசோதனை,  எண்டோஸ்கோபி,  பிடி ஸ்கேன்,  எம்ஆர்ஐ ஸ்கேன் ஆகியவை அந்த நோயாளிகளின் உடலில் புற்றுநோய் மறைந்ததை உறுதிசெய்தன. ஒரு மருந்துப் பரிசோதனை இதுபோன்ற அசாத்திய முடிவுகளைக் காட்டுவது இதுவே முதல் முறை.

ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட மூளை

Brain in a dish' learns to play Pong, offers a new way to discover drugs | The Straits Times

ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆய்வகத்தில் மூளைச் செல்களை வளர்த்தனர். அந்த மூளைச் செல்கள் 1970களின் வீடியோ கேம், பாங் போன்றவற்றை விளையாடக் கற்றுக்கொண்டன. மேலும்  அவை சூழலை உணர்ந்து அதற்கேற்ப பதிலளிக்கும் தன்மையையும் கொண்டிருந்தன. ஸ்டெம் செல்கள், எலியின் கருமுட்டைகள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட சுமார் 800,000 செல்கள் அந்த ஆய்வகத்தில் ‘சிறுமூளையாக’ வளர்க்கப்பட்டன.

மீண்டும் உயிர்பெற்ற பன்றிகள்

பன்றிகளை இழிவா எண்ணாதீங்க.. அதன் உடல் உறுப்புகளை மனிதனுக்கு பொருத்த முடியுமாம்! | Genetically modified pig's organs can be transplanted for humans - Tamil Oneindia

மரணித்துச் சில மணிநேரமான பன்றிகளின் உடலினுள் ஊட்டச்சத்து நிறைந்த திரவத்தைச் செலுத்துவதன் மூலம் அவற்றின் உடலில் இருக்கும் இறந்த செல்களை அறிவியலாளர்கள் உயிர்ப்பித்துள்ளனர். அந்தப் பன்றிகள் சுயநினைவின்றி இருந்தபோதிலும், அவற்றின் மூளை இதயம்.  கல்லீரல்,  சிறுநீரகம் ஆகியவற்றின் செல்கள் மீண்டும் செயல்படுவதற்கான அறிகுறிகளைக் காட்டின.

குழந்தை கருந்துளை

கருந்துளை (Black Hole) என்றால் என்ன? | Tamil Universe

2022 டிசம்பரில் எம்ஐடி ஆராய்ச்சியாளர்கள் குவாண்டம் கணினியில் இரண்டு சிறிய கருந்துளைகளை வெற்றிகரமாக உருவகப்படுத்தி அவற்றுக்கிடையே ஒரு செய்தியை அனுப்பினார்கள். ஒரு பரந்துபட்ட பார்வையில் சொல்வது என்றால்இ விண்வெளியையும் காலத்தையும் சிதைக்காமல் ஒரு விண்வெளி நேரச் சுரங்கப்பாதையை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

(Visited 15 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிந்திருக்க வேண்டியவை

பூமியின் உள் மையத்தின் ரகசியம் அம்பலம்!

பூமியின் உட்புறத்தில் என்ன இருக்கிறது என்ற கேள்விகளுக்கான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும்போது மேலும் ஆழமாகவும், விரிவாகவும் கேட்கபடுகிறது. கேள்விகள் கேட்பதும் அதற்கான பதிலை தேடுவதும்
அறிந்திருக்க வேண்டியவை

ChatGPTக்குப் போட்டியாக Google எடுத்த அதிரடி நடவடிக்கை

Google நிறுவனம் ChatGPTக்குப் போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாகச் செயல்படும் கலந்துரையாடல் செயலியை Google அறிமுகம் செய்யவுள்ளது.