மொட்டுக்கட்சியில் இணைய ஆசைப்படும் உறுப்பினர்கள்

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கமுக்கு ஆதரவு தெரிவித்து பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து விலகிச் செயற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவசரமாக கூடி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இக்கட்சியின் flour road கொழும்பு காரியாலயத்தில் கூடிய இவர்களில் அநேகமானவர்கள் தாம் மீண்டும் பொதுஜன பெரமுனவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.
பொதுஜனவின் கடந்த கால வீழ்ச்சி குறித்து இங்கு இவர்கள் பரவலாக கலந்து ஆலோசித்துள்ளதாகவும் இவர்களில் இன்னொரு குழுவினர் தாம் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து பொதுத் தேர்தலை எதிர்கொள்வது என்ற கருத்தையும் முன் வைத்துள்ளனர்.
எனினும் இவர்களை மீண்டும் சேர்த்து கொள்வது இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலின் பின் ஊடகங்களுக்கு வழங்கிய செய்தியில் தெரிவித்திருந்தார்.