இலங்கை

இலங்கையில் குடும்பத்தினருக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுக்கும் கோரிக்கை

தமது குடும்ப உறுப்பினர்களுக்கு காப்புறுதி தொகையை வழங்குமாறு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற பிரதானிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது வரை உறுப்பினர்கள் மட்டுமே காப்பீட்டுத் தொகையைப் பெற்று வருவதோடு, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஆண்டுக் காப்பீட்டுத் தொகையின் மதிப்பு பத்து லட்சம் ரூபாயாகும்.

அவர்களது சம்பளத்தில் இருந்து சில தொகையை பிடித்தம் செய்து குடும்ப உறுப்பினர்களுக்கு காப்பீடு தொகையை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் வாரங்களில் நாடாளுமன்றத்தின் சபைக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதுடன், இந்த விடயம் தொடர்பில் அங்கும் கலந்துரையாடவுள்ளதாக பல உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

பல மாதங்களாக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடத்தப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்