துப்பாக்கிகளை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!
பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் துப்பாக்கிகளை வழங்குமாறு கோரியுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பந்தப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்றத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். மேலும் இந்தக் கோரிக்கைகள் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எம்.பி.க்களின் பாதுகாப்பு குறித்து காவல்துறைத் தலைவர் தலைமையில் சமீபத்தில் சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து எம்.பி.க்களுக்கும் துப்பாக்கிகளை வழங்குவது குறித்து முடிவு செய்யப்படவில்லை எனவும் தற்போதுள்ள அச்சுறுத்தல்களை பகுப்பாய்வு செய்த பிறகு துப்பாக்கிகளை வழங்குவது குறித்து முடிவு செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.




