நியூசிலாந்தில் திருட்டில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராஜினாமா

நியூசிலாந்தில் பல்பொருள் அங்காடியில் பொருட்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
42 வயதான கோல்ரிஸ் கஹ்ராமன் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் இத்தகைய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் பசுமைக் கட்சியின் உறுப்பினர் ஆவார்.
ஈரானியப் பெண்ணான இவர், 2017ஆம் ஆண்டு அகதி விசா மூலம் நியூசிலாந்துக்கு வந்து நாடாளுமன்ற உறுப்பினரான முதல் பெண்மணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரண்டு துணி வியாபாரம் சம்பந்தமாக பல முறை இந்த மாதிரியான திருட்டைச் செய்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார், மேலும் அவர் தவறு செய்ததை ஒப்புக்கொண்டார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணி தொடர்பான கடுமையான மன அழுத்தம் காரணமாக தான் இவ்வாறு நடந்து கொண்டதாகவும், அதற்காக தன்னை சாக்கு போக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
கடையொன்றில் இருந்து பெறுமதியான கைப்பையை திருடும் சிசிடிவி காணொளி வெளியானதை அடுத்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.