இந்தியா செய்தி

மோசமான வார்த்தைகளில் எம்.ஜி.ஆரை விமர்சித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கண்டனம்

வருகின்ற 9″ம் தேதி அவிநாசியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ஆ.ராசா மோசமான வார்த்தைகளில் எம்.ஜி.ஆரை விமர்சித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். இருந்த வரை கருணாநிதியால் தலை தூக்க முடியவில்லை. யார் கட்சி ஆரம்பித்தாலும் எம்.ஜி.ஆர். பெயரை சொல்லாமல் அரசியல் செய்ய முடியாது.

ஆ.ராசா பேச்சிற்கு எதிர்ப்பு கடுமையாக கிளம்பியுள்ளது. ஸ்டாலின் எம்.ஜி‌”ஆரை தேர்தல் நேரத்தில் பெரியப்பா என்கிறார். ஆனால் ராசாவை அவர் கண்டிக்கவில்லை.

திமுக ஆட்சிக்கு வர காரணம் எம்.ஜி.ஆர். திமுகவை வளர்த்த பெருமை எம்.ஜி.ஆரையே சேரும். எம்.ஜி.ஆரை மோசமாக பேசிய ஆ.ராசாவிற்கு நீலகிரி பாராளுமன்ற தொகுதி மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

நியாயம் இல்லாமல் மோசமான வார்த்தையில் ஆ.ராசா பேசியுள்ளார். இப்படி நல்லவர்கள் யாரும் பேசமாட்டார்கள். திமுகவில் யாரும் நல்லவர்கள் இல்லை. அதிமுக அரசு திட்டங்களை திமுக அரசு நிறுத்தி விட்டது. திமுக அரசு 3 ஆண்டுகளில் எந்த திட்டமும் தரவில்லை.

அதிமுக கட்சி, சின்னத்தை முடக்க பார்த்தார்கள். உலகில் மிகப்பெரிய கட்சி அதிமுக. திமுகவிற்கு வாக்களிக்க மக்கள் யாரும் தயாராக இல்லை. திமுகவினரே திமுக ஆட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார். அதிகமான எம்.பி.க்களை நாம் ஜெயிப்போம். திமுக, பாஜகவில் புதிதாக யாரும் சேர்வதில்லை. வயதானவர்கள், ஓய்வு பெற்றவர்கள் தான் அக்கட்சிகளில் சேர்க்கின்றனர்.

அதிமுகவில் இளைஞர்கள் கொத்து கொத்தாக சேர்க்கிறார்கள். நமக்கு எதிரி திமுக தான். அதிமுகவிற்கு போட்டி திமுக உடன் மட்டும் தான். மற்ற கட்சிகள் நம்முடன் போட்டி போடவே முடியாது.

சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார்.நாடாளுமன்ற தேர்தலில் திமுக தோற்கடிக்கப்பட வேண்டும்.

நல்ல கூட்டணி வரும். அதிமுக கட்சியை பார்த்தே திமுக பயப்படுகிறது. தொண்டர்களை சோர்வடைய செய்ய அதிமுக உடன் கூட்டணிக்கு யாரும் வரவில்லை என பொய் செய்திகளை பரப்புகிறார்கள் என தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி,ஒருங்கிணைந்த கோவை மாவட்ட பொறுப்பாளர்கள் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. ஆ.ராசா எங்களது நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரை பற்றி மோசமான வார்த்தையில் பேசியுள்ளார்.

அதை ஒட்டுமொத்தமாக அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் கண்டித்துள்ளார்கள்.வருகின்ற 9″ம் தேதி அவிநாசியில் ஆ.ராசாவை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மக்கள் விரோத திமுக ஆட்சியில் கோவை மாவட்டத்திற்கு எந்த திட்டமும் வரவில்லை. கடந்த 3″ஆண்டுகளில் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் 40தும் வெல்வோம். திமுக மாவட்ட செயலாளர்கள் அரசு திட்டங்களை துவக்கி வைக்கிறார்கள். அதிகாரிகள் திமுககாரர்களாக மாறிவிட்டார்கள்.

குடிநீர் பிரச்சனை உள்ளது. நிர்வாக திறன்மையின்மை காரணமாக மக்கள் சிரமப்படுகிறார்கள். மக்கள் பிரச்சனைகள் குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என தெரிவித்தார்.

மேலும் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு தான் கிடைக்கும் என்ற ஓ.பி.எஸ் கருத்து குறித்த கேள்விக்கு – அவர் பதிலளிக்க மறுத்தபடி கிளம்பி சென்றார்.மேலும் இக்கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான அம்மன் அர்ஜுனன் மற்றும் பி.ஆர்.ஜி அருண்குமார் திமுகவினரையும் ஆ.ராசாவையும் கடுமையாக சாடினர்.

(Visited 16 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content