சுவிட்சர்லாந்தில் உருகும் பனிப்பாறைகள் – அதிகரிக்கும் அபாயம்
புவி வெப்பமடைதல் காரணமாக பூமியின் வளிமண்டலத்தின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.
இதனால் துருவங்கள் மற்றும் உயரமான மலைகளில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இந்த வெப்பநிலை அதிகரிப்பு சிகரங்களில் உள்ள பனிப்பாறைகளை உருக்குகின்றன.
சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, சுவிட்சர்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் சுருங்கி வருகின்றன, குறைந்த பனிப்பொழிவு மற்றும் உயரும் வெப்பநிலை ஆகியவற்றின் கலவையாக இரண்டு ஆண்டுகளில் அவற்றின் பனி அளவு மொத்தத்தில் பத்து சதவீதத்தை இழந்துள்ளன.
ஸ்விஸ் அகாடமி ஆஃப் சயின்ஸின் கிரையோஸ்பியர் கண்காணிப்புக்கான சுவிஸ் கமிஷனின் தரவுகளின்படி, பனிப்பாறைகள் 2023 இல் அவற்றின் மொத்த அளவின் நான்கு சதவீதத்தை இழந்தன.
ஏற்கனவே 2022 ஆம் ஆண்டில் ஆறு சதவீத பனிப்பாறைகள் அழிந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டே வருடங்களில் மொத்த அளவில் 10 சதவீத பனிப்பாறைகளை இழப்பது என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என குறிப்பிடப்படுகின்றது.