மெல்போர்ன் ஷாப்பிங் சென்டரில் கத்திக்குத்து தாக்குதல் – 3 பேர் காயம்
மெல்போர்னில் உள்ள ஷாப்பிங் சென்டரில் பலரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெல்போர்னின் தென்கிழக்கில் உள்ள ஃபவுண்டன் கேட் ஷாப்பிங் சென்டருக்கு அருகில் பேருந்து நிறுத்தத்தில் மூன்று பேர் தாக்கப்பட்டதாக வந்த தகவலைத் தொடர்ந்து அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.
பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பாக்ஸ் கட்டர் மூலம் அவர்கள் வெட்டப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
30 வயதான உள்ளூர் ஆடவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும், ஆனால் பின்னர் ஷாப்பிங் சென்டருக்குள் கைது செய்யப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.





