பிலடெல்பியாவில் மருத்துவ விமானம் விபத்து : பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அறிவிப்பு!
பிலடெல்பியாவில் ஒரு குழந்தை, அவரது தாயார் மற்றும் நான்கு பேரை ஏற்றிச் சென்ற மருத்துவ போக்குவரத்து விமானம், ஒரு பரபரப்பான வணிக வளாகத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானது.
இதில் குறித்த விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
வடகிழக்கு பிலடெல்பியா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பின்னர், மாலை 6:30 மணியளவில் வடகிழக்கு பிலடெல்பியாவில் உள்ள ரூஸ்வெல்ட் மால் அருகே லியர்ஜெட் 55 என்ற விமானம் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஷ்ரைனர்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தை பிலடெல்பியா மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றதாகவும், விபத்து நடந்தபோது ஒப்பந்த விமான ஆம்புலன்சில் தனது தாயாருடன் தனது சொந்த நாடான மெக்சிகோவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறியது.
விமானத்தை இயக்கிய நிறுவனமான ஜெட் ரெஸ்க்யூ ஏர் ஆம்புலன்ஸ், விமானத்தில் நான்கு பணியாளர்கள் இருந்ததாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியாகவில்லை.