நாடாளாவிய ரீதியில் போராட்டத்தை முன்னெடுக்கும் வைத்திய அதிகாரிகள்!
நாடளாவிய ரீதியில் பிரதான வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்றும் (11.09) நாளையும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டில் வைத்தியர்களை தக்கவைத்துக்கொள்வதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதில் அரசாங்கம் தாமதம் செய்து வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று மதிய உணவு நேரத்தில் வைத்தியசாலைகளுக்கு முன்பாக மௌனப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
எதிர்கால நடவடிக்கை குறித்து தீர்மானிக்க சங்கத்தின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் சுகாதார அமைப்பில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமது சங்கம் யோசனை முன்வைத்துள்ள போதிலும், இது தொடர்பாக இதுவரை குறிப்பிடத்தக்க பதில் வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே இந்த விடயங்களை முன்வைத்து இன்றும், நாளையும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.