சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2030 ஆம் ஆண்டுக்குள் அதன் தரத்தை உயர்த்த வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது.
அதாவது, தொழிற்சாலைகளில் கட்டப்பட்ட கிட்டதட்ட 1,000 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் தரத்தை உயர்த்த வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.
இந்த தரம் உயர்த்தும் நடவடிக்கை இடைக்காலத்தில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும்.
2040 ஆம் ஆண்டுக்குள், தங்கும் விடுதிகளில் புதிய தரங்கள் நிறைவேற்றி இருக்கப்பட வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. இடைக்காலத் தர நிலைகளின்கீழ், தங்கும் விடுதி அறையில் 12 பேர் வரை வசிக்கலாம்.
படுக்கைகளுக்கு இடையே 1 மீ இடைவெளி இருக்க வேண்டும். இந்த 1 மீ இடைவெளி புதிய தரநிலைகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆறு குடியிருப்பாளர் பகிந்துகொள்ளும் வகையில் ஒரு கழிவறை அமைக்கப்பட வேண்டும். அதனுடன் சேர்த்து குளியல் வசதி மற்றும் கை கழுவும் பேசின் வசதி இருக்க வேண்டும்.
2030க்குள் பொதுவசதிகளை தவிர்த்து, ஒவ்வொரு குடியிருப்பாளரும் வசதியாக இருக்க குறைந்தபட்சம் 3.6 சதுர மீட்டர் தனிப்பட்ட இடம் இருக்க வேண்டும்.
அதுவே 2040 ஆம் ஆண்டு விடுதிகளின் புதிய தரநிலைகளின் கீழ் 4.2 சதுர மீட்டர் அல்லது அதற்கும் அதிகமான தனிப்பட்ட இடம் இருக்க வேண்டும்.
2033 அல்லது அதற்கு முன்பே குத்தகை காலாவதியாகும் தங்கும் விடுதிகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர் தங்குமிடங்கள் சட்டத்தின் (FEDA) கீழ் வராத ஆறு படுக்கைகள் அல்லது அதற்கும் குறைவான சிறிய தங்கும் விடுதிகள் அதில் சேராது.