அமெரிக்காவில் 30 ஆண்டு காணாத அளவில் தட்டம்மைப் பரவல்

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் கடந்த 30 ஆண்டு காணாத அளவில் தட்டம்மைப் பரவல் ஏற்பட்டுள்ளது.
560க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த வாரம் மட்டும் 20 பேருக்கு நோய் தொற்றியது. 58 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 2 பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர். கெயின்ஸ் மாவட்டத்தில் 360க்கும் அதிகமான தட்டம்மைச் சம்பவங்கள் பதிவாயின.
அதன் அருகே உள்ள இன்னொரு மாவட்டத்தில் 41 சம்பவங்கள். நோய்ப்பரவல் ஓராண்டு நீடிக்கக்கூடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
தட்டம்மைப் பரவலால் இளம் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடப் பெற்றோர் பலர் விரைந்தனர். கோவிட் காலக்கட்டத்தில் அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையத்துக்கு 11 பில்லியன் டொலர் மானியம் கிடைக்கவில்லை.
அதனால் உதவி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவமனைகள், பள்ளிகள், அமைப்புகள் போன்றவற்றோடு சேர்ந்து நிலைமையைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் இயன்றவரை உதவிவருகின்றனர்.