சுவிஸ் பார் விபத்து: மேயர் மழுப்பல்! மாநகராட்சிக்கு நெருக்கடி.
சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானாவில் உள்ள ‘லீ கான்ஸ்டலேஷன்’ (Le Constellation) பாரில் ஏற்பட்ட கோரத் தீ விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர் மற்றும் 116 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தப் பகுதியின் மாநகராட்சி மீது தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் ரோமைன் ஜோர்டான் (Romain Jordan) வலியுறுத்தியுள்ளார்.
விசாரணை அதிகாரிகளின் முதற்கட்ட தகவலின்படி, பாரில் ஷாம்பெயின் பாட்டில்களில் இணைக்கப்பட்டிருந்த ‘ஸ்பார்க்லர்’ (Sparklers) எனப்படும் மத்தாப்புத் தீப்பொறிகள், கூரையில் இருந்த சத்தத்தை உள்வாங்கும் நுரை (sound-insulating foam) மீது பட்டு தீ பரவியதாக நம்பப்படுகிறது.

பாரின் மேலாளர்களான பிரெஞ்சு தம்பதி ஜாக் மற்றும் ஜெசிகா மோரெட்டி (Jacques and Jessica Moretti ) ஆகியோர் மீது கவனக்குறைவால் ஏற்பட்ட மரணம், உடல் காயம் மற்றும் தீ வைப்பு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. “இந்த விபத்தால் நாங்கள் தற்போது நிலைகுலைந்து போயுள்ளோம்” என்று கூறியுள்ள அவர்கள், இந்த விபத்து சம்மந்தப்பட்ட விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்துள்ளனர்.





