தேர்தல் முடியும் வரை சமூக ஊடகங்களை தடை செய்த மொரீஷியஸ்
இந்தியப் பெருங்கடல் தீவு மொரிஷியஸ், பொதுத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக, ஊழல் தொடர்பாக பதட்டங்கள் அதிகரித்ததால் சமூக ஊடகங்களுக்கான அணுகலைத் தடுத்துள்ளது.
இது அனைத்து சமூக ஊடக தளங்களுக்கும் அணுகலைத் தடுக்க தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தத் தடை நவம்பர் 11ஆம் தேதி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு “தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பை பாதிக்கக்கூடிய சட்டவிரோத இடுகைகள்” என்று குறிப்பிடுகிறது.
அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஆகியோரின் தொலைபேசி அழைப்புகளின் இரகசிய பதிவுகள் இணையத்தில் கசிந்தபோது இந்த மாத தொடக்கத்தில் மோதல்கள் ஆரம்பமாகியது.
சமூக ஊடகத் தடை குறித்து அரசாங்கத்திடம் இருந்து உடனடி கருத்து எதுவும் இல்லை.
“இது அதிர்ச்சியளிக்கிறது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது ஒரு பீதியின் அடையாளம்” என்று மாற்றத்திற்கான எதிர்க்கட்சி கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான பால் பெரெங்கர் குறிப்பிட்டுள்ளார்.