நுவரெலியாவில் பாரிய புயல் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நுவரெலியா பகுதியில் பெய்த கனமழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக பெரியளவிலான சைப்ரஸ் மரங்கள் முறிந்து விழுநு்துள்ளன.
இதன் காரணமாக நுவரெலியா-பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பிரதான வீதிகள் மற்றும் சிறிய வீதிகளில் வாகனம் செலுத்தும் போது எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டுமாறு பொலிஸார் சாரதிகளுக்கு வலியுறுத்துகின்றனர்.
இதேவேளை நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளமையினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.





