இத்தாலியில் 100 வயதைக் கடந்தோர் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு
இத்தாலியில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 30 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இத்தாலியின் தேசிய புள்ளிவிவரப் பிரிவு அறிக்கை இதனை வெளியிட்டுள்ளது.
மூத்த குடிமக்கள் பிரிவை சேர்ந்தவர்கள் என்றால், அதிகம் 60 வயதோருக்கும் மேற்பட்டவர்களே அதிகம் இருப்பார்கள். பொதுவாக 100 வயதைக் கடந்தவர்கள் இப்போது குறைவாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் இத்தாலியில் இப்போது அவர்களின் எண்ணிக்கையே அதிகம் இருப்பதாக இத்தாலியின் அறிக்கை கூறுகிறது.
இத்தாலியின் தேசிய புள்ளிவிவரப் பிரிவு நேற்று வெளியிட்ட இந்த அறிக்கையில் குழந்தைப் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் 100 வயதைக் கடந்தோரின் எண்ணிக்கை அங்கு 30 சதவிகிதம் அதிகரித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு மட்டும் 100 வயதுக்கும் 104 வயதுக்கும் இடைப்பட்ட இத்தாலியர்களின் எண்ணிக்கை 22,000க்கும் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.