ஜெர்மனியில் வீட்டு வாடகை கட்டணங்களில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு – நெருக்கடியில் மக்கள்
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/IMG-20250210-WA0001.jpg)
ஜெர்மனியில் வீட்டு வாடகை உயர்வு பாரிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில் பொது மக்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நாடாளவிய ரீதியில் வாடகை உயர் குறித்து புதிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய நாட்டின் பல நகரங்களில் வாடகைகள் அதிகரித்து வருகின்றன. பழைய வாடகை ஒப்பந்தத்தைப் பெற்ற அதிர்ஷ்டசாலிகளுக்கு, நிலைமை சிறப்பாக உள்ளது. எனினும் வாடகைக்கு வீடு பெற்ற பலர் இன்னும் வாடகை உயர்வைக் காண்கிறார்கள்.
ஆனால் ஜெர்மன் வாடகை சந்தையில் புதிதாக வருபவர்களுக்கு அல்லது புதிய வீட்டிற்குச் செல்ல விரும்புவோருக்கு, வாடகை அதிகரிப்பு மயக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வாடகைகள் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின் கடைசி சில மாதங்களை ImmoScout நிறுவனம் ஆய்வு செய்தது. இதில் முன்னைய காலாண்டை விட பெர்லின் நகர் தவிர நாடு முழுவதும் வாடகைகளுக்கான கட்டணங்கள் அதிகமாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது.