தென் கொரியாவில பாரிய தீவிபத்து!!! இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

தென்கொரியாவின் நாசு நகரில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டு நேரத்தில் காலை 11.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன
அப்போது பணியில் இருந்த 45 ஊழியர்கள் மீட்கப்பட்டதாகவும், இங்கு 540 மில்லியன் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் மின் கசிவு என விசாரணைக் குழு தெரிவித்ததுடன், தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தொழிற்சாலையில் சுமார் இருநூறு பேர் பணிபுரிவதாகவும் பல இலங்கையர்களும் அங்கு பணிபுரிவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தீயினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அங்கு பணிபுரியும் இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார்
(Visited 16 times, 1 visits today)