எக்ஸ் தளத்தை விட்டு பெருமளவான பயனர்கள் வெளியேற்றம்
அமெரிக்க தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதை உறுதி செய்ததையடுத்து, அந்நாட்டில் 100,000க்கும் மேற்பட்ட பயனர்கள் சமூக ஊடக தளமான ‘X’ ஐ விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
115,000 க்கும் மேற்பட்ட அமெரிக்க பயனர்கள் தேர்தலுக்கு அடுத்த நாள் தங்கள் ‘எக்ஸ்’ கணக்குகளை செயலிழக்கச் செய்தனர் என டிஜிட்டல் நுண்ணறிவு தளமான SimilarWeb ஐ மேற்கோள் காட்டி CNN தெரிவித்துள்ளது.
டெஸ்லா உரிமையாளரான எலோன் மஸ்க் 2022 இல் பொறுப்பேற்றதிலிருந்து X இன் மிகப்பெரிய பயனர் நிராகரிப்பு இதுவென கூறப்படுகின்றது.
எக்ஸ்’ கைவிட்டவர்கள் ‘புளூஸ்கை’ போன்ற மாற்று தளங்களுக்கு இடம்பெயர்வதாகவும் சிஎன்என் தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, ‘BlueSky’ இன் பயனர் எண்ணிக்கை 90 நாட்களில் இரட்டிப்பாகி, ஒரே வாரத்தில் ஒரு மில்லியன் புதிய பதிவுகளுடன் 15 மில்லியனை எட்டியது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மஸ்க்கின் செல்வாக்கால் இந்தப் போக்கு வலுப்பெற்றது.
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பை ஆதரிப்பதற்காக மஸ்க் பல மாதங்களாக ‘X’ ஐப் பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.