இலங்கையில் இன்று காலை இடம்பெற்ற பாரிய விபத்து – போக்குவரத்து பாதிப்பு

மீரிகம வில்வத்த பிரதேசத்தில் கொள்கலன் லொறியொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் காரணமாக பிரதான பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வில்வத்த ரயில் கடவையில் கொள்கலன் ஒன்று ரயிலுடன் இன்று காலை மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக கிரிஉல்ல – மீரிகம வீதி போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அலுவலக ரயிலுடன் இந்த கொள்கலன் மோதியுள்ளது.
(Visited 20 times, 1 visits today)