ஆனமடுவ பகுதியில் இரு லொறிகள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து!
																																		ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதிகள் இருவரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனமடுவ பரமகந்த சந்திக்கு அருகில் நேற்று (24.08) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியை முந்திச் செல்ல முற்பட்ட லொறி ஒன்று எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் பின்னர் பிரதேசவாசிகள் லொறிகளில் சிக்கி படுகாயமடைந்த சாரதிகளை மீட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 8 times, 1 visits today)
                                    
        



                        
                            
