சவப் பெட்டியுடன் மயானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மேர்வின் சில்வா

ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் அமைச்சர் மார்வின் சில்வா உள்ளிட்ட சிலர் சவப் பெட்டியை ஏந்தியவாறு பொரளை மயானத்திற்குள் பிரவேசித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமூக வலைதளங்களின் சடலத்தை அடக்கம் என்ற முழக்கத்தை முன்வைத்து போராட்டம் நடத்தப்பட்டது.
முன்னாள் அமைச்சர் தலைமையிலான குழுவினர் மயானத்திற்குள் பிரவேசித்த போது மயானத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
ஆனால் முன்னாள் அமைச்சர் தலைமையிலான குழுவினர் எதிர்ப்பையும் மீறி மயானத்திற்குள் நுழைந்து போராட்டத்தை நடத்தினர்.
(Visited 12 times, 1 visits today)