16,000 கார்களை திரும்பப்பெறும் மாருதி சுசுகி நிறுவனம்
மாருதி சுஸுகி இந்தியா தனது எரிபொருள் பம்ப் மோட்டாரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 16,000க்கும் அதிகமான விற்பனையான இரண்டு கார் மாடல்களை திரும்பப் பெற்றுள்ளது.
ஜூலை முதல் நவம்பர் 20l9 வரை தயாரிக்கப்பட்ட பலேனோவின் 11,851 யூனிட்களையும், வேகன்ஆர் மாடல்களின் 4,190 யூனிட்களையும் திரும்பப் பெறுவதாக நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
“ஃப்யூல் பம்ப் மோட்டாரின் ஒரு பகுதியில் குறைபாடு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இது அரிதான சந்தர்ப்பங்களில் என்ஜின் ஸ்டால் அல்லது இன்ஜின் ஸ்டார்ட் பிரச்சனைக்கு வழிவகுக்கும்” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
(Visited 9 times, 1 visits today)