ஜெர்மனியில் அதிகரிக்கும் திருமண முறிவுகள் – நீதிபதிகள் இல்லாமல் கடும் நெருக்கடி நிலை
ஜெர்மனியில் மெக்கலம்பேர்க்போக்ஃவொமன் என்ற மாநிலத்தில் உள்ள நீதிமன்றகளில் நீதிபதிகள் பற்றாக்குறையாக காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது நீதிமன்றங்களில் பணியாற்றுகின்ற நீதிபதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக இந்த மாநிலத்தில் உள்ள முக்கிய நகரமான சிவரி ஸ்சுவனில் அமைந்துள்ள நகர நீதிமன்றத்தில் சில வழக்குகள் நிறைவு பெறாத நிலையில் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக திருமணம் முறிவு தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு இந்த நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது.
இதன் காரணத்தினால் பல ஆண்டுகள் இந்த வழக்குகள் தொடர்ந்தும் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த மாநிலத்தில் உள்ள சிவரி ஸ்சுவரினன் நகரத்தில் 10000 பேர்களில் 23.2 திருமண முறிவுகள் இடம்பெற்று வருவதாகவும்,
இவ்வகையான முறிவுகள் தொடர்பான வழக்கு விசாரணைகளை நடத்த முடியாத நிலையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கு நீதிமன்றகளில் நீதிபதிகள் பற்றாக்குறையாக காணப்படுவதே காரணம் என குறிப்பிடப்படுகின்றது.