டிரம்பின் தொடக்க நிதிக்கு மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா $1 மில்லியன் நன்கொடை
தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் தொடக்க நிதிக்கு அமெரிக்காவின் மெட்டா நிறுவனம் US$1.3 மில்லியன் நிதி வழங்கியுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் டோனல்ட் டிரம்புடன் ஆன நேரடி உறவை மேலும் வளர்க்கும் நோக்கில், மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸுக்கர்பெர்க், டிரம்பின் தொடக்க நிதிக்கு US$1 மில்லியன் நன்கொடை அளித்துள்ளதாக மெட்டா நிறுவனம் டிசம்பர் 10ஆம் திகதி தெரிவித்தது.
அந்த நன்கொடை அளிக்கப்பட்டதற்கான முழு விவரங்களை அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை. டிரம்பும் ஸுக்கர்பெர்க்கும் சந்திப்பு நடத்தி, ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த நன்கொடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு தலைவர்களும் கடந்த நவம்பர் மாதம் சந்தித்துக் கொண்டனர். அப்போது ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டனர். அப்போது, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிரம்புக்கு ஸுக்கர்பெர்க் பாராட்டுத் தெரிவித்துக் கொண்டார். அத்துடன் டிரம்புடன் அவர் இரவு விருந்தில் கலந்துகொண்டார். அந்த விருந்தில் செனேட்டர் மார்கோ ரூபியோவும் கலந்துகொண்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.
டிரம்புடன் நல்லுறவு வைத்துக்கொண்ட புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளில் ஸுக்கர்பெர்க்கும் ஒருவர்.
அதிபர் தேர்தலுக்கு முன்னதாக ஸுர்க்கர்பெர்க், ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், கூகள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை ஆகியோர் டிரம்புக்கு ஆதரவு தெரிவித்தனர். தேர்தல் நேரத்தில் அவர்கள் டிரம்புக்குப் புகழாரம் சூட்டியதோடு, எதிர்க்கட்சியினரை விமர்சித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.