பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்த மார்க் மார்கோலிஸ் காலமானார்

‘பிரேக்கிங் பேட்’, ‘பெட்டர் கால் சால்’ தொடர்களில் ஹெக்டர் சாலமான்கா என்ற கதாபாத்தித்தில் நடித்த மார்க் மார்கோலிஸ் (83) காலமானார்.
நியூயார்க் நகரில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனையில் காலமானார் என்று அவரது மகனும், நடிகரும், நிட்டிங் பேக்டரி என்டர்டெயின்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரியுமான மோர்கன் மார்கோலிஸ் தெரிவித்தார்.
1970 களில் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய மார்கோலிஸ் அன்றிலிருந்து தற்போது வரை நடித்துவந்தார். திரைப்படங்கள், பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தாலும், “பிரேக்கிங் பேட்” மற்றும் “பெட்டர் கால் சால்” ஆகிய தொடர்களில் ஹெக்டர் சாலமான்கா என்ற கதாபாத்தித்தில் நடித்த அவரின் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது
(Visited 10 times, 1 visits today)