கனடாவின் அடுத்த பிரதமராக மார்க் கார்னி தெரிவு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை ஹாரிபாட்டர் வில்லன் வால்டிமோர்ட்டோடு ஒப்பிட்டுப் பேசிய மார்க் கார்னிதான் கனடாவின் அடுத்த பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
லிபரல் கட்சியின் புதிய தலைவரும், கனடாவின் புதிய பிரதமரும் இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
86 சதவீத வாக்குகளை பெற்று புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவு செய்யப்பட்டார்.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பதவி விலகலை அடுத்து அந்நாட்டில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது.
அதில், லிபரல் கட்சி சார்பாக போட்டியிடக்கூடிய மார்க் கார்னிக்கு ஆதரவாக அதிக நிதி திரண்டிருப்பதை அடுத்து, அவருக்கான ஆதரவு பெருகியுள்ளது.
பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற கார்னி, அமெரிக்காவின் வரி – பதிலடிகளை அனுபவத்தோடு கையாளுவார் எனவும் நம்பப்படுகிறது.
(Visited 14 times, 14 visits today)