உலகம் செய்தி

அமைதிக்கான நோபல் பரிசை பெற நோர்வே செல்லும் மரியா கொரினா மச்சாடோ

நாட்டில் தலைமறைவாக வசித்து வரும் வெனிசுலா(Venezuela) எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ(Maria Corina Machado), தனது நோபல் பரிசைப் பெறுவதற்காக நோர்வே(Norway) தலைநகர் ஒஸ்லோவுக்குச்(Oslo) செல்வதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மச்சாடோவுடன் நான் பேசினேன், அவர் ஒஸ்லோவிற்கு வருகை தருவதை உறுதிப்படுத்தியுள்ளார் என்று நோர்வே நோபல் நிறுவனத்தின் இயக்குநரகம் மற்றும் நோர்வே நோபல் குழுவின் செயலாளர் கிறிஸ்டியன் பெர்க் ஹார்ப்விகென்(Kristian Berg Harpviken) குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, திகதி அல்லது பயண திட்டம் குறித்து தகவல் வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 2024 முதல் தலைமறைவாக இருக்கும் மச்சாடோ, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின்(Donald Trump) ஆதரவாளர் ஆவார், மேலும் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ(Nicolas Maduro) ஒரு போதைப்பொருள் கும்பலுக்குத் தலைமை தாங்குகிறார் என்ற வாஷிங்டனின்(Washington) கருத்தை ஒப்புக்கொள்கிறார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!