பாகிஸ்தானில் சீரற்ற வானிலையால் பலர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் பெய்த கனமழைக் காரணமாக 08 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையால் அறைகள் இடிந்து விழுந்து, விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களில் மூன்று பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 முதல் 7 வயதுக்குட்பட்ட உடன்பிறந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மழைகாரணமாக இவ்வாண்டில் மாத்திரம் ஏறக்குறைய 30 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 29 times, 1 visits today)