நைஜீரியாவில் இராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலர் பலி!
வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஒரு கிராமத்தில் ராணுவம் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குலில் , முஸ்லிம் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்த பொதுமக்கள் கொல்லப்பட்டு காயமுற்றனர் என்று உள்ளூர் அதிகாரிகள், தெரிவித்துள்ளனர்.
நைஜீரியாவின் ஆயுதப் படைகள் நாட்டின் வடமேற்கு மற்றும் வடகிழக்கில் 14 ஆண்டுகளாக ஜிஹாதிகளுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடுனா மாநிலத்தில் துடுன் பிரி கிராமத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 30 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இது குறித்த தகவல்களை அல்லது சேத விபரங்களை இராணுவம் வெளியிடவில்லை.
இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கடுனா மாநில ஆளுநர் உபா சானி, கொள்ளையர்களை குறிவைத்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இருப்பினும் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
(Visited 3 times, 1 visits today)