மன்னாரில் கொலை குற்றவாளிக்கு 14 வருடங்களின் பின்னர் மரண தண்டனை விதிப்பு!
009 ஆம் ஆண்டு ஒக்டோபர் 02 ஆம் திகதி மன்னார் பரப்பகண்டல் இராணுவ முகாமில் இரு இராணுவ வீரர்களை சுட்டுக் கொன்ற மற்றுமொரு இராணுவ வீரருக்கு 14 ஆண்டுகள் கழித்து தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (06.12) மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம். எம். எம். மிஹல் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில் குறித்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.
மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ உறுப்பினர் தனிப்பட்ட தகராறு காரணமாக மூன்று இராணுவ உறுப்பினர்களை சுட்டுக் கொன்றார், அதில் இருவர் கொல்லப்பட்டார் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.
சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மன்னார் முருங்கன் பொலிஸாரின் ஊடாக தாக்கல் செய்யப்பட்டதுடன், கொலை இடம்பெற்று 14 வருடங்களின் பின்னர் சந்தேகநபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.