இலங்கை செய்தி

பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மன்னாரில் 3 நாள் சிகிச்சை

டிட்வா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பண்ணை விலங்குகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக, மன்னாரில் நாளை முதல் மூன்று நாள் நடமாடும் கால்நடை மருத்துவ சேவையை தொடங்குவதாக அரச கால்நடை வைத்தியர்கள் சங்கத் தலைவர் டொக்டர் உபுல் ரஞ்சித் குமார தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய கால்நடைகளைப் பராமரிக்கும் விவசாயிகளுக்கு உதவுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

வேளாண்மை, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சகம், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை (DAPH) மற்றும் அரசு கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் ஆதரவுடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது

மன்னாரின் பல கிராமங்களுக்கு எட்டு கால்நடை மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டு பாதிக்கப்பட்ட பண்ணைகளை கண்டறிந்து சிகிச்சை அளிப்பார்கள் என்றும் பொதுமக்கள் தங்கள் விலங்குகளை கொண்டு வர ஊக்குவிக்கப்படுவார்கள், என்றும் டொக்டர் குமார கூறினார்.

மேலும் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வெள்ளத்தால் மேய்ச்சல் நிலங்கள் சேதமடைந்ததால், 250 மெட்ரிக் தொன் கால்நடை தீவனம் மன்னாருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது மாவட்டத்தில் உருவான தீவன நெருக்கடியை சமாளிக்க உதவும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

AJ

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!