செய்தி

இலங்கை அரச ஊழியர்களுக்கு கட்டாயமாகும் சட்டம்!

இலங்கை அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை அலுவலகங்களில் இருந்து கடமைகளைச் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சில அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உரிய காலத்தை பொருட்படுத்தாமல் வந்து செல்வதை அவதானித்ததையடுத்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுற்றறிக்கை மூலம் இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சுற்றறிக்கையின்படி, அரசு அலுவலகங்கள் பிற்பகல் 3:00 மணி வரை பண பரிவர்த்தனைக்காக திறந்திருக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், பணியின் போது தனது அலுவலக அடையாள அட்டையை அணிந்துகொள்ள வேண்டும்.

மேலும் சீருடை உதவித்தொகை பெறும் அனைத்து அரசு அலுவலர்களும் தங்களது சீருடைகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொது தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் அமைச்சின் கீழ்மட்ட அதிகாரி முதல் அமைச்சின் செயலாளர் வரை அனைத்து மட்டத்திலான அதிகாரிகளும் அலுவலகத்தில் தங்கியிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்நாளில் நோய் அல்லது தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் தவிர வேறு காரணங்களுக்காக எந்த விடுமுறையும் அனுமதிக்கப்படவில்லை என்பதை நிறுவனத் தலைவர் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், நாள்தோறும் பொதுமக்களிடம் இருந்து வரும் முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு, அனைத்து அரசு நிறுவனங்களின் விசாரணைச் சாளரங்கள், பணம் ஏற்றுக்கொள்ளும் சாளரங்கள், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான சாளரங்கள் தொடர்ந்து திறந்து வைக்கப்பட வேண்டும் எனவும் வேலை நேரத்தில் மற்ற தனிப்பட்ட காரணங்களுக்காக வௌியே செல்லக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கவீனமுற்ற வாடிக்கையாளர்கள் அலுவலகங்களுக்கு வருவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 23 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!