மனாக்கி உதவித்தொகை திட்டம்: நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தின் முக்கிய அறிவிப்பு
மனாக்கி நியூசிலாந்து உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தின் அறிவிப்பின்படி, புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் 1-28 பிப்ரவரி 2024 க்கு இடையில் திறக்கப்படும் என தெரிவித்துள்ளது.
2024 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் செமஸ்டர் 1, 2025 இல் இருந்து கற்கை நெறியை தொடங்குவார்கள் என்று உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
ஆர்வமுள்ள நபர்கள் https://nzscholarships.my.site.com/Scholar/s/eligibility-test வழியாக மனாக்கி நியூசிலாந்து உதவித்தொகை தகுதித் தேர்வை ஆன்லைனில் நிறைவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
புலமைப்பரிசில் திட்டம் தொடர்பான மேலதிக விபரங்களை Manaaki இணையத்தளமான https://www.nzscholarships.govt.nz/category/ இலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.